NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாகன ஓட்டிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு: ஒரிஜினல் வேண்டாம்.. டிஜிட்டல் போதும்.. ”

மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத்
துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், ''அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமத்தின் அசல், காப்பீடு சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு இருந்தது.

மேலும், இதற்கு மாற்று வழியாக, ''டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சேமித்து காண்பிக்கலாம்'' என்றும் அதே சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தியது.


ஆனால் வாகன ஓட்டிகள், "டிஜிட்டல் ஆவணங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்" என்று புகார் தெரிவித்துவந்தனர், மேலும், அசல் உரிமங்கள் தொலைந்து போனால், அதனை திரும்ப பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, அசல் உரிமத்திற்கு மாற்றாக டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது. இதனை போக்குவரத்து ஊழியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive