சென்னை மாணவர்கள் குறைவாக உள்ள, 3,133 அரசு பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்து, 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை; 31 ஆயிரத்து, 293 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது.மாநில அளவில், 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தலா, 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். பல பள்ளிகளில், மாணவர்களே இல்லாத நிலையும் உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித் தரத்தை உயர்த்தவும், செலவுகளை குறைக்கவும், பள்ளிகளை இணைக்க, கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக, 3,133 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் அடங்கும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள, தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை ஒன்றாக இணைத்து, ஒரே வளாகத்தில் செயல்பட, ஏற்பாடு செய்யப்பட உள்ளது.இந்த இணைப்பின் வாயிலாக, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, ஒரே பள்ளியில் படிக்க முடியும். எனவே, எல்.கே.ஜி.,யில் மாணவர்கள் சேர்ந்தால், பிளஸ் 2 வரை, வேறு பள்ளிக்கு மாற வேண்டியதில்லை. இதற்கான முயற்சியாக, மாவட்ட அளவில், இதுபோன்ற மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. அவற்றின் செயல் திறன் அடிப்படையில், இணைப்பு நடவடிக்கை தொடரும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப்பு
எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப்பு
சென்னை மாணவர்கள் குறைவாக உள்ள, 3,133 அரசு பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்து, 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை; 31 ஆயிரத்து, 293 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது.மாநில அளவில், 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தலா, 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். பல பள்ளிகளில், மாணவர்களே இல்லாத நிலையும் உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித் தரத்தை உயர்த்தவும், செலவுகளை குறைக்கவும், பள்ளிகளை இணைக்க, கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக, 3,133 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் அடங்கும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள, தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை ஒன்றாக இணைத்து, ஒரே வளாகத்தில் செயல்பட, ஏற்பாடு செய்யப்பட உள்ளது.இந்த இணைப்பின் வாயிலாக, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, ஒரே பள்ளியில் படிக்க முடியும். எனவே, எல்.கே.ஜி.,யில் மாணவர்கள் சேர்ந்தால், பிளஸ் 2 வரை, வேறு பள்ளிக்கு மாற வேண்டியதில்லை. இதற்கான முயற்சியாக, மாவட்ட அளவில், இதுபோன்ற மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. அவற்றின் செயல் திறன் அடிப்படையில், இணைப்பு நடவடிக்கை தொடரும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...