சென்னை புத்தக கண்காட்சி, ஜன. 4ல் துவக்கம்
சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறுவதாக தென்னிந்தியத் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுத் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்தியத் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தலைவர் வயிரவன் கூறியதாவது: ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வரும் சென்னை புத்தககண்காட்சி வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி சென்னை நந்தனத்திலுள்ள YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும், முதல் முறையாக இந்தக் கண்காட்சி 17 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், இதில் 800 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு 12 லட்சம் தலைப்புகளில் 1 அரை கோடி புத்தகங்களுக்கு மேலாக கண்காட்சியில் இடம்பெற உள்ளதாகவும் அவர் கூறினார். புத்தக கண்காட்சியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இங்கு விற்கப்படும் புத்தகங்கள் அனைத்திற்கும் 10% தள்ளுபடி உள்ளதாகவும் கூறிய அவர் இங்கு பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிறந்த பதிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive