தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் மேல்நிலை கல்வி கொண்டுவரப்பட்ட போது, தொழிற்கல்வி பிரிவுக்கு, தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 1990ல், இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டது

ஆனால், மேல்நிலை வகுப்புக்கு பாடம் நடத்தியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிப்பலன்களே, தற்போது வரை பெறுகின்றனர்

பதவி உயர்வு இல்லாததோடு, ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை

இதன் காரணமாக, துவக்கத்தில், 66 பாடங்கள் கையாளப்பட்ட நிலையில் தற்போது, 12, தொழிற்கல்வி பாடங்களே, பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது

கோவையில், தொழிற்கல்வி பாடப்பிரிவு படிப்படியாக மூடப்பட்டு, தற்போது, 40 பள்ளிகளில் மட்டுமேஉள்ளது. நிரந்தர பணியிடம் உருவாக்கப் படாததால், காலியிடங்கள் கணக்கிட்டு, ஆசிரியர்கள் நிரப்பப்படுவதில்லை

தற்போது, தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ள பள்ளிகள், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களின் பட்டியல் சமர்ப் பிக்குமாறு, இணை இயக்குனர் சுகன்யா உத்தரவிட்டுள்ளார்.

Share this

0 Comment to "தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...