அரசு ஊழியர்களுக்கு ஆளுநர் தேர்வு வைப்பதா? - முதல்வர் நாராயணசாமி கண்டனம்.

புதுச்சேரியில், அரசு ஊழியர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தகுதி தேர்வு நடத்துவதற்கு, முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஆளுநர் மாளிகை அலுவலகத்தை, கவர்னர் செயலகம் என்று அரசு அனுமதியில்லாமல் கிரண்பேடி மாற்றியுள்ளதாக கூறினார். புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வரும்  4- ஆம் தேதி நாடாளுமன்றம் முன்பு நடைபெற உள்ள அனைத்து கட்சி போராட்டத்திற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Share this

0 Comment to "அரசு ஊழியர்களுக்கு ஆளுநர் தேர்வு வைப்பதா? - முதல்வர் நாராயணசாமி கண்டனம்."

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...