அண்ணா பல்கலையில், 18 பேராசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு, வரும், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.அண்ணா பல்கலையின், சென்னை வளாகத்தில் செயல்படும், கிண்டி இன்ஜி., கல்லுாரியில், உதவி பேராசிரியர்கள் பணிக்கான காலியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணிதம், ஐ.டி., மற்றும் அச்சு தொழில்நுட்ப பாடங்கள் உள்ளிட்ட, மொத்தம், 18 இடங்கள் காலியாக உள்ளன. இதில், தற்காலிக உதவி பேராசிரியராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், வரும், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.கிண்டி, இன்ஜி., கல்லுாரிக்கு நேரடியாக வந்தோ அல்லது தபால் வழியாகவோ, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments