பள்ளி வகுப்பறை மேற்கூரையை ஒன்றுகூடி தூக்கி சென்ற மக்கள்

அறந்தாங்கி  அருகே இடமாற்றம் செய்வதற்காக பள்ளி வகுப்பறை மேற்கூரையை ஒன்று கூடி தூக்கி சென்ற மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மறமடக்கி  அரசு மேல்நிலைப்பள்ளியில் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்

இந்த பள்ளியில் செயல்பட்டு வந்த ஓடுகளால் வேயப்பட்ட 6 மற்றும் 7ம் வகுப்பறை கட்டிடம் கஜா புயலால் ஓடுகள் உடைந்து கடுமையாக சேதமடைந்தது. இதனால் மாணவர்கள் அந்த வகுப்பறைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது

இதனையடுத்து புதிய கட்டிட வசதி வேண்டும் என்ற பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று நபார்டு வங்கியின் மூலம் ரூ.2 கோடியில் புதிய கட்டிடம் கட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை மாணவர்களுக்கு தற்காலிக வகுப்பறை அமைக்க முடிவெடுத்த பள்ளி நிர்வாகத்தினர் புயலால் சேதமடைந்த பள்ளி மேற்கூறையை அப்படியே மாற்று இடத்தில் வைத்து வகுப்பறை கட்ட திட்டமிட்டனர்

அதன்படி, பழைய மேற்கூரை பிரித்து மீண்டும் பொருத்தினால் அதிக செலவு மற்றும் காலதாமதம் ஆகும் என்பதால் அக்கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றினைந்து 60 அடி நீளமுள்ள அந்த வகுப்பறை மேற்கூரையை அப்படியே தூக்கி சென்று மாற்று இடத்தில் வைத்தனர்

ஊர் கூடி தேர் இழுக்கலாம் என்பார்கள், இங்கு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு கிராம மக்கள் ஒன்று கூடி பள்ளி வகுப்பறை மேற்கூரையை தூக்கி சென்ற காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது

Share this

0 Comment to "பள்ளி வகுப்பறை மேற்கூரையை ஒன்றுகூடி தூக்கி சென்ற மக்கள்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...