NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சக ஆசிரியர்களுடன் நட்பு!..


        பள்ளியில் புதிதாக சேரும் ஆசிரியர்கள் பெரும்போலானோர் ஆர்வம் மிகுதியில் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவார்கள். இது இயல்பானது.

        சில நடைமுறை உண்மைகளை நாம் பகிர்ந்துகொண்டால் நல்லது என்பதால்தான் இந்தமடல்.

           நீங்கள் நன்றாக பணியாற்றினால் மட்டும் போதாது.
எனது நண்பனுக்கு நிகழ்ந்ததை சொன்னால் விசயம் பளிச்சென்று புரியும். நண்பன் 26 வயதில் போட்டித் தேர்வின் மூலம் தினம் பணம் புழங்கும் ஒரு துறையில் பணியில் சேர்ந்தான். குடிமைபணிக்கு தயார் செய்தவன் என்பதால் இயல்பாகவே ஒரு துடிப்பும் நேர்மையும் உள்ளவன். அலுவலகத்தின் செங்கல் கூட பணம்வாங்க பயல் நிமிர்ந்துகொண்டு லஞ்சம் பெற மறுத்தான்.

        இதுவரை சரி. ஆனால் ஒரு தவறையும் செய்தான். லஞ்சம் பெறும் சக ஊழியரை கேவலமாக பார்ப்பதும் (பார்வை மட்டுமே ) அவர்களிடமிருந்து விலகியும் இருந்தான்.


         சில மாதங்களில் நண்பனுக்கு ஒரு பெண்ணை பேசி முடிக்க இருந்தார்கள் பெற்றோர். ஆனால் பெண்வீட்டார் கடைசி நேரத்தில் மறுத்துவிட்டனர். எல்லாம் அலுவலக நண்பர்களின் கைங்கர்யம்தான். ஒரு பொய்யை பரப்பி நிம்மதியடைந்தனர்.சாட்டை படம் போல எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள். தாய் , தந்தைபோல் அன்பு செலுத்துபவர்களாகவும், தோழனாய் கேட்காமலேயே உதவி செய்பவர்களும் தான் பெரும்பாலானோர்.

       நீங்கள் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறீர்கள் என்பதும் முக்கியம் நீங்கள் சக ஆசிரியரோடு எவ்வளவு சுமூகமாய் உறவை பேணுகிறீர்கள் என்பதும் முக்கியம். அவர்கள் உங்களை மாதிரி அர்பணிப்பு உள்ளவர்களாக இருக்கலாம் அல்லது எதிர் மறையாகவும் இருக்கலாம். நீங்கள் அவர்களுடன் நேர்மறையான உறவை பேணுவது முக்கியம்.

          பிறரின் மிக எளிய தோற்றத்தைக் கண்டு அவர்களின் திறன்களை கணிக்காதீர்கள். புதிய சூழலையும் தடுமாற்றத்தையும் கண்டு  அச்சமுறாதீர்கள். எல்லாவற்றையும் அறிந்தவர்களாக நம்மை நாம் கருதும் போது புதிய அறிதலை நம்மில் தவிர்க்கிறோம் என்றே பொருள்.
சோம்பேறி தூங்க மூஞ்சிகளை பார்த்தேலே பத்திக்கிட்டு வருது இதுலே அவர்களோடு எப்படி சுமூகமாய் பேசுவது ? என்ற மனப்பான்மையே மிகத்தவறானது. ஹலோவ் பாஸ் அவர்களிடம் நீங்கள் மிகுந்த மரியாதையோடு இருங்கள். மிரட்டல் அல்ல. அது மட்டுமே அறிவுபூர்வமான செயல். உண்மையான அன்பு அறிவானது அது உங்களைப்பற்றிய சரியான புரிதலை அனைவரிடத்திலும் ஏற்படுத்தும்.

ஏன் ?

       உலகம் தனி மனிதர்களால் இயங்குவது இல்லை. நாம் அனைவரும் சேர்ந்தால் தான் உலகு, அதன் இயக்கம் எல்லாம் சாத்தியம். பள்ளி செயல்பாடு என்பது ஒரு குழு செயல்பாடு. நீங்கள் தனிக்காட்டு ராசா என்றால் என் நண்பனுக்கு நிகழ்ந்தது உங்களுக்கும் நிகழலாம்.

தினம் கட்டாயம்  செய்யுங்கள்


1. முதல் ஆளாக அனைவர்க்கும் வணக்கம், ஒரு புன்சிரிப்பு
2. நேரம் தவறாமல் வகுப்பிற்கு செல்க /வருக
3. விவாதங்களை தவிர்க்கவும்
4. மறந்தும் பிறர் கருத்தை தவறு என்று நிறுவ வேண்டாம்
5. மறந்தும் உங்கள் வகுப்பறை மகிழ்வுகளை பகிர வேண்டாம் (குத்தல் விமர்சங்கள் கிடைக்கலாம், பேசாமல் ஒரு வலைப்பூவில் பகிர்வது நன்று)
6. பாரட்டுகளை பக்குவத்துடன் வாங்கிக்கொள்ள பழகவும்.
7 இதுக்கு முன்னாள் அஞ்சாம் வாய்பாடு கூட தெரியாத பயன்கள் இப்போ நான் வந்ததற்கு பின் ஜோரா கணக்கு போடுறாங்க.. இது மாதிரி கண்ணிவெடி வாக்கியங்களை தவிர்க்கவும்.
( மேற்கூறிய செயல்களை நட்பாக இயல்பாக செய்யுங்கள் , பின்னாளில் இதன் அற்புதம் உங்களுக்கு புரிய  வரும்)


        வாய்ப்பிருந்தால் ஹொவ் டு வின் பிரண்ட்ஸ் அண்ட் இன்ப்ளுயன்ஸ் பீபில் (நண்பர்களை சம்பாதிப்பது எப்படி அவர்களை தன்வயப் படுத்துவது  எப்படி ) என்கிற டேல் கார்நிகியின் புத்தகத்தை படியுங்கள். டொராண்சில் தேடினால் ஆங்கில ஆடியோ வடிவம் கிடைக்கும்.
(கட்டுரை சில மாற்றங்களுடன் )

-மலர்தரு  மது




1 Comments:

  1. I'm a teacher of a school. I immediately need 20200 maths revision test question papers
    Please send to Id

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive