பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த ஆண்டே உயர்கல்வியில் சேர முடியாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கவலை


               பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த ஆண்டே உயர்கல்வியில் சேர முடியாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

           கடந்த 2012&13ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்தது. இதன் முடிவுகள் மே 9ம் தேதி வெளியானது. இதில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு கடந்த மாதம் 19ம் தேதி முதல் உடனடி சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சியடையாத பாடங்களுக்கு தேர்வு எழுதினர்.இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் திருத்தும் பணி கடந்த வாரம்தான் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் இத்தேர்வை எழுதிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்விக்கு சேர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ரெகுலர் மற்றும் மாலை நேர வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று வகுப்புகள் தொடங்கி ஒரு மாதமாகிறது.

               இனி உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாகி, அதன் பின் சான்றிதழ்களை பெற்று, இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியில் சேர்வது கடினமான செயலாக இருக்கும் என்பதால், இத்தேர்வை எழுதிய மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.இதுகுறித்து, மாணவர்கள் கூறுகையில், Ôஉடனடித் தேர்வின் நோக்கமே அதில் தேர்வாகும் மாணவர்கள் நாட்களை வீணாக்காமல் இந்த கல்வி ஆண்டிலேயே உயர் கல்வியில் சேர்வதுதான். ஆனால் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு ரிசல்ட் வெளியாக தாமதம் ஏற்பட்டு வருவதால் எங்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு இந்த ஆண்டிலேயே கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.பல மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து, ஏதாவது ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சியடையாமல் உள்ளனர். அந்த மாணவர்கள் உடனடித் தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று, இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியை தொடர முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். எனவே, இனியும் தமாமதிக்காது உடனடி தேர்வு முடிவுகளை காலதாமதமின்றி வெளியிட வேண்டும்‘ என்றனர்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive