குழந்தைகள் பள்ளிகளில் சாப்பிட பெற்றோர் தடை


               காரி்ல் சமீபத்தில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் பள்ளிகளில் வழங்கப்படும் உணவை சாப்பிட குழந்தைகளின் பெற்றோர் தடை
விதித்துள்ளனர். குறிப்பாக சம்பவம் நடைபெற்ற பள்ளியில் மாணவர்கள் சாப்பிட பெற்றோர் அனுமதிக்கவில்லை. 
 
             அங்கு விஷம் கலந்த உணவு தரப்படுவதால் தங்களின் பெற்றோர் அந்த உணவை சாப்பிடக் கூடாது என தெரிவித்துள்ளதாக குழந்தைகள் தெரிவித்துள்ளனர். கந்தமன் பள்ளியில் நடைபெற்றதை போல் எங்களுக்கும் நடந்து விடும் என பெற்றோர் அஞ்சுவதாகவும் அக்குழந்தைகள் தெரிவித்துள்ளனர். தரமற்ற உணவு வழங்குவதாக வீட்டிலோ அல்லது வேறு யாரிடமோ தெரிவித்தால் ஆசிரியர்கள் தங்களை அடிப்பதாகவும் குழந்தைகள் தெரிவித்துள்ளனர். மேலும் எவ்வளவு சுகாதாரமாக, நல்ல முறையில் சமைத்தாலும் தங்களுக்கு அந்த உணவு வேண்டாம் என குழந்தைகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive