NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பின்னத்தில் (Fraction) பாடிய அவ்வை..!


              நமது பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக 'FRACTIONS' என்று இக்காலத்தில் நாம் அறியும் பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர்!

இதற்கு அவ்வை பாடிய பாடல் ஒரு நல்ல உதாரணம் :-

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!
இது தன்னை நையாண்டி செய்த புலவர் ஒருவரை பார்த்து அவ்வை வசை பாடியது (வசை = திட்டுதல் )
இதில் முதல் வரியில் வரும் " எட்டேகால்" என்பதை எட்டு + கால் அதாவது 8 + 1/4 என்று பிரித்து படிக்க வேண்டும்.
அப்படி படித்தால் 8 என்பதற்கு உரிய தமிழ் எண் " அ" அதே போல் கால் (Quarter) 1/4 - என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் " வ "
(1/4 cutting என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்துவிட்டு பின்னர் வரிவிலகிற்காக தமிழில் "வ" கட்டிங் என்று பெயர் வைத்ததை வேண்டுமானால் இங்கே புரிவதற்காக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! )
ஆக, எட்டேகால் = எட்டு + கால்
(எட்டு) 8 = அ
(கால் )1/4 = வ
எனவே இப்போது எட்டேகால் = அவ !!
இப்போது மேற்கண்ட பாடலின் முதல் வரியை படியுங்கள் .
'அவ' லட்சணமே என்று பொருள் வருகிறதல்லவா ?
இப்படி மிகவும் நுட்பமாக தன்னை இகழ்ந்தவனை வசை பாடுகிறார் அவ்வை!
அடுத்த வரிகளுக்கான பொருள் :-
----------------------------------------------------------
1. எமனேறும் பரியே - எருமைக்கடா
2. மட்டில் பெரியம்மை வாகனமே - மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே
3. முட்டமேல் கூரையில்லா வீடே - மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே
4. குலராமன் தூதுவனே - ராமன் தூதுவனே அதாவது குரங்கே
5. கடைசி சொல்லான 'ஆரையடா சொன்னாயடா ' என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.
" நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! " என்பது ஒரு பொருள்.
இதில் இப்போது 'சொன்னாய்' என்பதை மட்டும் பிரித்தால்
'சொன்னாய்' = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும் அல்லது
யாரைப் பார்த்துச் சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்!
Source : facebook.com




6 Comments:

  1. நான் ரொம்ப நாளா 'வ' கட்டிங் ன்னு பெயர் வச்சிருக்காங்களே .. என்ன அர்த்தம் ன்னு புரியாம இருந்தேன்.. இப்பதான் புரிந்தது..நன்றி .. பாடசாலை..

    ReplyDelete
  2. Tamiliku perumai, thamilatkalukkey perumai.

    ReplyDelete
  3. இது
    போல
    தனிப்பாடல்களை
    தமிழர்கள்
    அறியச்செய்யவும்
    நன்றி

    ReplyDelete
  4. arumai
    arumai

    ReplyDelete
  5. nanri pada salai.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive