NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Microsoft Word 2007 File களுக்கு Password Protection கொடுப்பது எப்படி?


              நம்மில் அதிகமானோர் Microsoft Word யை பயன்படுத்துகின்றோம். சில வேலைகளில் நாம் தயாரிக்கும் ஆவணங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் இரகசியமாக வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும். 
 
           நீங்கள் தொழில் புரியும் இடங்களில் shared computer களை பயன்படுத்துபவராயின் சில முக்கிய , இரகசிய தகவல்கள் கொண்ட ஆவணங்களை மற்றயவர்கள் பார்த்து விடுவார்களோ? என்ற பயம் (எண்ணம்) உங்களுக்கு வந்திருக்கலாம். இதற்கு தீர்வாகவே Microsoft Office 2007 ஆனது Security வசதிகளை வழங்கியிருக்கின்றது.
 
           இப் பாதுகாப்பு வசதியானது Microsoft Word மட்டுமல்லாது Microsoft PowerPoint, Excel இலும் பயன்படுத்த கூடியவாரு அமைக்கப்பட்டுள்ளது.
இவ் வசதியை பயன்படுத்துவது மிகவும் இலகுவானதே.
கீழ் காட்டப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றி Password Protection வழங்க முடியும்.
  1. Microsoft Office இல் இடது பக்க மேல் மூலையிலுள்ளMicrosoft Office Button யை Click செய்யுங்கள்.
  2. அங்கு  Save அல்லதுSave As option யை Click செய்யுங்கள் 


  3. பின்னர்  வரும் pop up window வில் Tools option Button யை Click செய்யவும். 


  4.  அதில் உள்ள General Option யை கிளிக் செய்து விட ஒரு Pop Up தோன்றும்
  5. பிறகு வரும் window வில் இரு optionகளில் ஏதாவது ஒன்றை தெரிவு             செய்யவும்.

  6. முதலாவது  Password To Open இதை வழங்கினால் நீங்கள் அந்த Document யை திறக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  password ஐ வழங்க வேண்டும்.

  7. இரண்டாவது  Password To Modify இதை வழங்கினால் யாராவது அந்த Document யை மாற்றியமைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  password ஐ வழங்க வேண்டும்.

 
அவ்வளவே தான் உங்கள் Document Password வழங்கப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுவிட்டது.




3 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive