புகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள் : பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புது ஏற்பாடு

         பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல் மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
 
      பிளஸ் 2 தேர்வு, வரும் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர்.

விடைத்தாளில் மாற்றம்:
கடந்த பொதுத்தேர்வை விட இந்த ஆண்டு தேர்வில், விடைத்தாளில் சில மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது. அதன்படி, மொழிப்பாட தேர்வுகளுக்கு கோடிட்ட விடைத்தாள்கள், வரைபடம் உள்ளிட்டவற்றை, விடைத்தாளுடன் சேர்த்து தைத்து வழங்குதல் ஆகியவை, புதிதாக அமல்படுத்தப்பட உள்ளன. தற்போது, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட தேர்வுக்கு, மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன், தேர்வரின் பெயர், பதிவெண், தேர்வு மைய எண் ஆகிய விவரங்கள் அச்சிடப்பட்ட, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

* கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு, மார்ச் 13ம் தேதி நடக்கிறது. இதில், 75 வினாக்களுக்கு விடையளிக்க, ஓ.எம்.ஆர்., ஷீட் வழங்கப்படும். 

* அனைத்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரும், ஓ.எம்.ஆர்., விடைத்தாள் அடங்கிய பாக்கெட்டை, அறிவிக்கும் தேதியில், முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும்.

* அதில், அனைத்து மாணவ, மாணவியருக்கான விடைத்தாள்கள் உள்ளனவா என்றும், அதன் விவரம் குறித்தும், எண்ணிக்கை சரியாக உள்ளதா எனவும், சேதமடையாமல் நல்ல நிலையில் உள்ளதா எனவும், சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

'ஷேடு' 

* சேதமடைந்திருந்தால், மாற்று விடைத்தாளை பெற்றுக் கொள்ளலாம். அதில் பதில் அளிக்கும் போது, கருப்பு நிற அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனா மூலமாக மட்டுமே, 'ஷேடு' செய்ய வேண்டும்.

* முதல், 75 நிமிடங்களில், அதாவது, 11:30 மணிக்குள், 75 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive