பேராசிரியர்கள் இன்றுமுதல் மறியல்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிப் பேராசிரியர்கள் செவ்வாய்க்கிழமை (பிப்.24) முதல் மூன்று நாள்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
 
          அனைத்துக் கல்லூரி பேராசிரியர்களும், ஊழியர்களும் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மதுரை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு தனியார் கல்லூரி ஆசிரியரல்லா அலுவலர் சங்கம் ஆகிய சங்கங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழு (ஜே.ஏ.சி.) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உதவிப் பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை கல்லூரி சாலையில் அமைந்துள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு மூன்று நாள்கள் நடைபெற உள்ள இந்த மறியல் போராட்டத்தில் தினமும் 600 முதல் 1000 பேராசிரியர்கள் பங்கேற்பர் என கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive