பாடசாலை பெருமிதம்கொள்கிறது! நமது ஆசிரிய தன்னார்வலர்களுக்கு நன்றிகள் பல...

Image result for Free service


           கல்வித்துறை சார்ந்த செய்திகளை வழங்கும் ஒரு வலைதளத்தால் வேறு என்ன செய்துவிட முடியும்?

முடியும். முடியும். முடியும்.
 • தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த, தன்னார்வலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்க முடியும்.
 • மாணவர்களை 100க்கு 100 மதிப்பெண் பெறத்தக்க உதவும் வகையில் வினாத்தாள்கள் தயாரித்து வழங்க இயலும்.
 • இது எளிதான செயல்தானே என நீங்கள் நினைத்தால் அது தவறு. பாடப்பகுதிகளில் மிக நுணுக்கமான பகுதிகளிலும், எங்கெல்லாம் வினா கேட்டால் மாணவர்கள் 100க்கு 100 ஐ தவற விடுவார்களோ, அப்பகுதிகளையெல்லாம் பொதுத்தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு நினைவூட்டும் வகையில் வினாத்தாள்கள் அமைந்துள்ளது.
 •  பாடசாலை வைத்த கோரிக்கை இது தான். “வினாத்தாளுக்கான ”கீ ஆன்சர்கள்” வலைதளத்தில் வெளியிட மாட்டோம். ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் எழுதி வழங்கக்கூடிய தங்கள் வினாத்தாளுக்கான விடைகளை தாங்களே திருத்தி மதிப்பீடு செய்து, மீள அனுப்பி வைக்கவேண்டும். மேலும் எவ்வாறெல்லாம் எழுதினால் 100க்கு 100 மதிப்பெண் கிடைக்கும் - என்ற ஆலோசனையும் விடைத்தாளில் வழங்க வேண்டும்.“.
 • தமிழகம் முழுவதும் உள்ள மீத்திறன் மிக்க மாணவர்களுக்கு இலவசமாக உதவும் வகையில் பாடசாலை ஏற்படுத்திய இத்திட்டத்தில் இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட முறை, வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் இதுவரை இலவசமாக திருத்தப்பட்டு மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 • பாடசாலை வழங்கிய வினாத்தாள்களில் இதுவரை ஒரு மாணவர் கூட 100க்கு 100 மதிப்பெண் பெற முடியாத வகையில் கடினமான வினாத்தாளும், நுணுக்கமான மதிப்பீடும் இருந்துள்ளது என்பது நமக்கு பெருமிதம் அளிக்கிறது. ஆனால் நம்மிடம் தேர்வு எழுதிய 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வரப்போகும் பொதுத்தேர்வுகளில் 100க்கு 100 மதிப்பெண் முழுமையாக பெறுவார்கள் என பாடசாலை ஆசிரியர் குழு உறுதியளித்துள்ளது. மாணவர்களே நிச்சயம் உங்களால் முடியும். வெற்றி பெற வாழ்த்துக்கள்!. ஆர்வமுடன் நமது தேர்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் மாணவர்களுக்கு நன்றி!
 • பாடசாலையின் சேவையில் தங்களை இணைத்துக்கொண்டு தொடர்ந்து மாணவர்களுக்காக பணியாற்றி வரும் தன்னார்வலர் ஆசிரியர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!
 • பொதுத்தேர்வு - 2015 க்கு மிக குறைவான நாட்களே உள்ளதால் மாணவர்கள் தாங்கள் எழுத வேண்டிய மீதம் உள்ள வினாத்தாள்களுக்கும் விரைவில் விடைகளை எழுதி அனுப்பிவைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 
 • நன்றி! - அன்புடன் பாடசாலை.

10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)


12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)


4 Comments:

 1. Good service.... Keep it up admin sir...

  ReplyDelete
 2. தங்களது சேவையை நினைத்து சந்தோஷமும்,பெருமையும் அடைகிறேன் அட்மின்,தங்களது பொதுச்சேவை குழுவுக்கு எண்ணிக்கையில்லாநன்றிகளையும்,
  வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்றென்றும் தொடரட்டும் தங்களது சேவை.

  ReplyDelete
 3. உங்கள் சேவை தொடர வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  ReplyDelete
 4. உங்கள் சேவை தொடர வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive