கணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

    கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது.
        அரசு பள்ளிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது. இதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, மாநில பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு, இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதில், கணினி பட்டதாரிகளுடன், இதர பாடங்களில் பட்டம் பெற்றவர்களின் பெயர்களும் இருந்தன. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகியது. இதையடுத்து, கடந்த டிசம்பரில் நடப்பதாக இருந்த, சான்றிதழ் சரிபார்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.  
           இந்நிலையில், கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மையம், தேதி உள்ளிட்ட விவரங்கள், டி.ஆர்.பி., இணையதளமான www.trb.tn.in இல் , நேற்று மாலை வெளியிடப்பட்டது. வரும், 27ம் தேதி முதல், மார்ச், 2ம் தேதி வரை, வேலூர், சேலம், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இது தொடர்பான அழைப்பு கடிதம், அதே இணைய தளத்தில் மட்டும் வெளியாகும். தனிப்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு துவங்க இன்னும், இரண்டு நாட்களே உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பட்டதாரிகளுக்கு தகவல் உரிய நேரத்தில் சென்று சேருமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது. மேலும், கால அவகாசம் குறைவாக உள்ளதால், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த அழைக்கப்படும் பட்டதாரிகளில், யாரேனும் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகமும், பட்டதாரிகளிடையே எழுந்துள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive