Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆரோக்கியமான தலைமுடியை பெற விரும்புபவரா நீங்க..?

     முடி கழிதல், சொரசொரப்பான முடி அல்லது சுருண்டு போகும் முடியால் கவலையாக உள்ளதா? இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்காக உங்கள் பணத்தை ரசாயனம் கலந்த பொருட்கள் வாங்குவதில் விரையம் செய்கிறீர்களா?

அப்படியானால்
தொடர்ந்து படியுங்கள்,
உங்களுக்காக தான் இது. பல
வகையான
தலைமுடி பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முட்டை பெரிதும்
உதவுகிறது.
முடியின் அடர்த்தியை அதிகரிக்க,
சுருள்களை குறைக்க,
சொரசொரப்பை குறைக்க
முட்டையை பயன்படுத்துங்கள். மலிவாக
விற்கும் முட்டையின்
உதவியை கொண்டு உங்கள்
முடியின்
ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.
முட்டையை கொண்டு செய்யப்படும்
பேக், ஷாம்பு மற்றும்
கண்டிஷனர்களை பற்றி இப்போது பார்க்கலாமா?
திடமான தலைமுடிக்கு…
தேவையான பொருட்கள்: –
– முட்டைகள் – –
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ்
எண்ணெய்
தயாரிக்கும் முறை:
*
இரண்டு முட்டைகளை எடுத்து அதிலிருந்து மஞ்சள்
கருவை தனியாக எடுங்கள். பின்
நுரை வரும் வரை மஞ்சள்
கருவை நன்றாக அடித்துக்
கொள்ளுங்கள். அதனுடன் 2
டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின்
ஆலிவ்
எண்ணெய்யை சேர்த்து நன்றாக
கலக்குங்கள். கலவை அடர்த்தியாக
வருவதற்கு அதனை 3-4
நிமிடங்களா வரை நன்றாக
அடிக்கவும். இதோ, உங்கள்
தலை முடிக்கான மாஸ்க் தயார்.
* இந்த கலவையை தலை முடியில்
தடவுவதற்கு முன்பாக,
தலை முடியை மிதமான
ஷாம்புவை கொண்டு நன்றாக
அலசிக் கொள்ளுங்கள்.
தலை முடி ஈரமாக இருக்கும் போது, இந்த
கலவையை முடிகளின் வேர்கள், தலைச்
சருமம் மற்றும் நுனிகளில்
படும்படி தடவுங்கள். இப்போது தலையில்
ஷவர் கேப்
அணிந்து கொண்டு 20
நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.
அதன் பின் சாதாரண
ஷாம்புவை கொண்டு தலையை அலசி,
தட்டிக் கொடுங்கள்.
முட்டையில் உள்ள புரதம் உங்கள்
முடியை திடமாகவும்
மென்மையாகவும் மாற்ற
உதவும். அதே போல் ஆலிவ்
எண்ணெய் உங்கள்
முடிக்கு நீர்ச்சத்தை அளித்து ஒரு சிறந்த
கண்டிஷனராக செயல்படும்.
பளபளப்பான தலை முடிக்கு…
தேவையான பொருட்கள்: –
– முட்டைகள் –
– எலுமிச்சை சாறு
தயாரிக்கும் முறை:
* ஒரு முட்டையை கிண்ணத்தில்
போட்டு அதனோடு 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இந்த
கலவை மென்மையாக மாறும்
வரை அவைகளை நன்றாக கலக்கவும்.
பின் இந்த கலவையை உங்கள்
தலை முடியில்
தடவி ஒரு அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள்.
அதன் பின் மிதமான
ஷாம்புவை கொண்டு தலை முடியை அலசுங்கள்.
இதன் முடிவில் பளபளப்பான
தலைமுடியை பெற்றிடுவீர்கள்.
*
எலுமிச்சை சாறு பொடுகை தடுத்து தலைச்சருமத்தில்
உள்ள வறட்சியை நீக்கும்.
முட்டை உங்கள்
தலை முடி அமைப்பை பளபளவென
மாற்றும்.
பட்டுப்போன்ற தலை முடிக்கு…
தேவையான பொருட்கள்: –
– முட்டைகள் –
– தேங்காய் எண்ணெய்
தயாரிக்கும் முறை: முட்டையின் மஞ்சள்
கரு இரண்டை எடுத்து ஒரு கிண்ணத்தில்
போட்டு, நுரை தள்ளும்
அளவிற்கு அதை நன்றாக
அடியுங்கள். பின் அதனுடன் 2
டீஸ்பூன் தேங்காய்
எண்ணெய்யை சேர்த்து நன்றாக
கலக்கவும். உங்கள்
தலைமுடியை கழுவிய பின்பு, இந்த
கலவையை உங்கள் முடியில் தேய்த்து 5
நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள்.
பின்
தண்ணீரை கொண்டு முடியை கழுவினால்
ஆழமான கண்டிஷனிங்
பயனை பெறலாம்.
இப்படி செய்வதால்
சொரசொரப்பான
மற்றும் சுருண்ட முடி பிரச்சனைகள்
நீங்கி தலை முடியை மென்மையாக
மாற்றும்.
ஆரோக்கியமான தலை முடிக்கு…
தேவையான பொருட்கள்: –
– முட்டைகள் –
– ஆப்பிள் சீடர் வினிகர் –
– கற்றாழை –
– மினரல் வாட்டர்
தயாரிக்கும் முறை:
* முட்டையுடன் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர்
வினிகர், 3 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் மற்றும் அரை கப்
மினரல் வாட்டரை கலக்கவும். இந்த
கலவையை ஒரு கிண்ணத்தில்
ஊற்றி சாதாரண ஷாம்புவை போல்
பயன்படுத்தலாம்.
* ஏற்கனவே சொன்னதை போல்,
நம்முடைய தலைமுடிக்கு பல வகையில்
உதவியாக இருக்கிறது முட்டை.
ஆனால் அதிலிருந்து ஏற்படும்
துர்நாற்றமே அதில் உள்ள
ஒரே பிரச்சனை….!




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive