Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள் வங்கிக்கணக்கு துவக்குவதில் தாமதம்

        தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு வங்கிக்கணக்கு துவக்கி, அதற்கான விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்வதில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாமதம் செய்து வருகின்றனர்.
          இதை கண்டித்தும், உடனடியாக பதிவேற்றம் செய்யவும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் மனிதவளத்துறையில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இவர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கும் கல்வி உதவித்தொகையை, நேரடியாக வங்கிக்கணக்கில், மத்திய அரசே வழங்க உள்ளது. இதனால், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, வங்கிக்கணக்கு துவக்கி,அதற்கான விபரங்களை, அதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில், பதிவேற்றம் செய்ய, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், தலைமை ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. வங்கிக்கணக்கு துவக்குவதில், தாமதம் ஏற்படுவதாக தலைமை ஆசிரியர்கள் புகார் கூறி வந்த நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர், முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, உடனடியாக விபரங்களை பதிவேற்றம் செய்யும் படி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த, 2014ம் ஆண்டு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக்கணக்கு விபரம், பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை சென்னை, நாகை,புதுக்கோட்டை, ராமநாதபுரம், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே,மிகக்குறைந்த அளவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, மற்ற மாவட்டங்களில் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
இதில், முதன்மைக்கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி, தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம் விடுபடாமல், ஆகஸ்ட், 14ம் தேதிக்குள், விபரங்களை பதிவேற்றம் செய்து, அந்த விபரங்களை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive