Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பஸ் முதல் பெண் டிரைவர் மாற்றுப்பணி தராததால் தவிப்பு:


         தமிழகத்தில், அரசு பஸ்சை இயக்கிய, முதல் பெண் டிரைவர் என்ற பெருமைக்கு உரியவர் வசந்தகுமாரி, 57. துவக்கத்தில், பஸ் டிரைவர் பணியில் சேர முயன்ற போது, உயரம் குறைவு எனக்கூறி ஓரம் கட்டப்பட்டார்; தொடர் முயற்சியால், தன், 34 வயதில், அரசு பஸ் டிரைவரானார்.
 
          அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, 'சிறப்பாக செயல்படு; ஆதரவாக இருப்பேன்' என்று கூறிய வார்த்தைகளை உள் வாங்கி, பஸ்சை இயக்க துவங்கினார். தற்போது, நெல்லை கழகமாக செயல்படும், அப்போதைய நேசமணி போக்குவரத்து கழகத்தில், 1993ல் பணியில் சேர்ந்தார். பயணிகளும், பணியாளர்களும் வியக்கும் அளவிற்கு சிறப்பாக பஸ்சை இயக்கினார்.
துவக்கத்தில், நகர பஸ், நிறுத்தமில்லா பஸ் என இயக்கியவர், பின், நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே பஸ்சை இயக்கி வந்தார்.
23 ஆண்டுகள் கடுமையாக உழைத்தவருக்கு, வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
சர்க்கரை வியாதி, தலைசுற்றல், முதுகு வலி என, அடுத்தடுத்த பாதிப்பிற்கு ஆளான அவர், பணிமனைக்குள் பஸ்களை இயக்கி முறைப்படுத்தும், மாற்று பணி கேட்டார்; நிர்வாகம் தர மறுத்து விட்டது. வேறு வழியின்றி, மாதத்தின் சில நாட்கள் மட்டும் வேலை பார்த்து வந்தார். ஒரு கட்டத்தில் வேலைக்கே செல்ல முடியாத அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
விளைவு, ஏழு மாதங்களாக பணிக்கு செல்ல முடியாமல் வீட்டில் உள்ளார். இவரது கணவர் செபஸ்டின் இறந்து விட்டதால், மகன் அகஸ்டின் வீட்டில் இருக்கிறார். பிழைப்புக்கு, மகன் கூலி வேலை செய்கிறார். இதனால், மொத்த குடும்பத்தையும் வறுமை வாட்டி வதைக்கிறது.
தன் நிலை குறித்து வசந்தகுமாரி கூறியதாவது:அண்ணா தொழிற்சங்கத்தில், பொருளாளராக பதவி தந்தனர். பஸ்சை இயக்குவதுடன், அந்த பணியையும் பார்த்து வந்தேன்; பின், பொருளாளர் பதவியை இழக்க நேரிட்டது. தற்போது கழுத்து எலும்பில் தேய்மானம் பிரச்னை உள்ளது. கையை உயர்த்தினால் வலி ஏற்படுகிறது. பணியில் இருக்கும்போது பல நேரங்களில், தலைச்சுற்றல் ஏற்பட்டு, பாதியிலேயே வீடு திரும்பி உள்ளேன். உடல் நலம் குன்றிய தொழிலாளர்களுக்கு மாற்று பணி தர வேண்டும் என்பது ஊழியர் ஒப்பந்தத்தில் இருக்கிறது. மாற்று பணி தர அதிகாரிகள் முன் வந்தாலும், சில அரசியல்வாதிகள் குறுக்கீட்டால் தருவதில்லை. முதல்வரை மீண்டும் சந்தித்து முறையிடலாம் என்றால், அனுமதி
தருவதில்லை. அவரை நான் பார்த்து விடாமல் இருக்கும் வகையில், சிலர் செயல்படுகின்றனர். என் நிலை குறித்து முதல்வர் அறிந்தால், எனக்கு மாற்று பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில், 'ஆன் டூட்டி' என்ற பெயரில், தொழிற்சங்க பணி எனக்கூறி விட்டு பணியே செய்யாமலும்; 'அதர் டூட்டி' என்ற பெயரில் எளிமையான மாற்று பணியிலும், 5,000 பேர் இருக்கின்றனர். ஆனால், நோயில் சிக்கிய பெண் ஊழியருக்கு, மாற்று பணி தராமல் இழுத்தடிப்பது வேதனைக்குரியது என, சக ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




6 Comments:

  1. பெண்களை அடக்கி ஆளும் ஆணாதிக்கத்தின் முன், பாவம் அந்த பெண் டிரைவர் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  2. அந்த பெண்ணின் நிலைமை மிகுந்த வருத்தத்துக்குரியது. நிச்சயம் நியாயம் கிடைக்கவேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்துக்கே இடம் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட கமெண்ட்டில் பெண்களை அடக்கி ஆளும் ஆணாதிக்கம் என்பது எதற்கு. இன்று ஆணாதிக்கம் என்று பேசுவதே மிகப்பெரிய தவறு. இன்றைக்கு பெரும்பாலன குடும்பங்கள் பெண்களால் சின்னா பின்னமாகி உள்ளது. இன்று இருப்பது பெண்ணாதிக்கம் தான் இன்னும் எத்தனை நாளைக்குதான் இதே பல்லவி பாடபோகிறீர்கள். அந்த பெண்போல எத்தனை ஆண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியுமா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், மிகுந்த சொந்த வலி தங்களின் கருத்தில் தெரிகிறது. ஆனால் பெண்ணாதிக்கம், ஆனாதிக்கம் என்பதை விட வலியவன்(ள்) எளியவனின்(ள்) மீது காட்டப்படும் இம்மனோபாவம் மாற்றப்பட வேண்டும்.

      Delete
    2. பெண்ணாதிக்கம், ஆனாதிக்கம் என்பதை விட வலியவன்(ள்) எளியவனின்(ள்) மீது காட்டப்படும் இம்மனோபாவம் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து 100 சதவீதம் ஏற்றுக்கொள்ளக் கூடியது.உண்மையும் கூட. ஆனால் சொந்த வலியின் தாக்கம் என்பது ஏற்புடையது அல்ல. இன்றைய நிலையைத்தான் தெரிவித்தேன். இது ஏதோ பெண்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்தாக நினைக்க வேண்டாம். எல்லோரும் சமமாக பார்க்கப்பட வேண்டும் என்பதே. நன்றி

      Delete
  3. என்ன கொடுமைசார் இது? மக்களாலும், மக்களின் முதல்வர் அவர்களாலும் போற்றப்பட்ட ஒரு சாதனைப்பெண்மணியை புறக்கணிப்பது.. தமிழக அரசின் பாராட்டுதலையே புறக்கணிப்பது போன்றதல்லவா? சாதிப்பவர்களை பாராட்டி பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி செய்தால் எப்படி? எதை எதைத்தான் அமைச்சர்களும், முதல்வர் அவர்களும் கண்காணித்துக்கொண்டிருப்பார்கள்?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive