நாமெல்லாம்
தவமாய் தவமிருந்து, ஏ.டி.எம். வாசலில் நின்று, பெற்ற 500 ரூபாய் நோட்டை
அச்சடிக்க அரசு செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 3 ரூபாய் தான்.
இதனை நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன்
ராம் மெஹ்வாலே சொல்லி இருக்கிறார். புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய்
நோட்டுக்களை அச்சடிக்க ஒரு நோட்டிற்கு 2.87 ரூபாய் முதல் 3.77 ரூபாய் வரை
செலவாவதாக கூறியுள்ளார். அச்சடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதால்,
புழக்கத்தில் உள்ள ஒட்டுமொத்த ரூ.500, ரூ. 2000 நோட்டுக்களின் மதிப்பு,
இப்போது தெரியாது என கூறியுள்ளார். பிப்ரவரி 24, 2017ன் படி, இந்தியாவில்
புழக்கத்தில் உள்ள கரன்சியின் மதிப்பு 11.64 லட்சம் கோடி ஆகும். பண
மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, டிசம்பர் 10, 2016 கணக்கின்படி ரிசர்வ்
வங்கி பெற்ற செல்லாத நோட்டுக்களின் மதிப்பு 12.44 லட்சம் கோடி ஆகும்.
நோட்டுக்கள் அச்சடிப்பதற்கு பயன்படுத்தப்படும், பேப்பர்களை சில குறிப்பிட்ட
சப்ளையர்கள் வழங்குவதாகவும், அவர்கள் வேறு யாருக்கும் அதே போன்ற
காகிதங்களை வழங்குவதில்லை என்றும் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில்
விளக்கம் அளித்தார். ஜனவரி 4, 2017 காலகட்டம் வரை, நாட்டில் மொத்தம் 2.18
லட்சம் ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ள நிலையில், இதில் 1.98 லட்சம் ஏ.டி.எம்
இயந்திரங்கள் புதிய, 500, 2000 நோட்டுக்களை வினியோகிக்கும் வகையில் மறு
வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
Revision Test 2026
Public Exam 2026
Home »
» புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்களை தயாரிக்க செலவாகும் தொகை 2 ரூபாய் 87 பைசா தான்!








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...