Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கு கணினி ஆசிரியர் நியமிக்க கோரிக்கை

      வேலையில்லா கணினி பட்டதாரிகள் ஆலோசனை கூட்டத்தில், கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஒன்று முதல், பிளஸ் 2 வரை கணினி பாடத்தை கட்டாயம் ஆக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை கட்டாயம் இடம் பெற செய்ய வேண்டும், தலைமையாசிரியர் அறையில் வீணாகி வரும் கணினி மற்றும் புரஜெக்டர்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 

இதற்கு, கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, வேலையில்லா கணினி பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம், வங்கனுாரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி மணிகண்டன், சரவணன், தேவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

வரும், 7ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், பெருந்திரளாக கலந்து கொள்வது எனவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

விலையில்லா மடிக்கணினி வழங்கும் அரசு, ஏற்கனவே அச்சிடப்பட்ட ஆறு முதல், 10ம் வகுப்பு வரையிலான கணினி பாடப்புத்தகத்தை மீண்டும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை கொண்டு வந்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive