Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உள்மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு

          அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.     இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசுகிறது. உள்மாவட்டங்களை பொறுத்த வரை மேற்கு திசை காற்றின் வேகம் குறைந்துள்ளது.இதன் காரணமாக வெப்பநிலையானது, தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் இயல்பிலிருந்து, 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. உள்மாவட்டங்களில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இது அடுத்த 3 நாட்களுக்கு தொடரும்.கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை, செங்கோட்டையில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை மழைக்கு வாய்ப்பில்லை. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive