NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மே 6-ந் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) எழுத வேண்டும். இந்த தேர்வு அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நடக்கிறது. தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

DIRECT LINK TO DOWNLOAD ADMIT CARD NEET 2018


இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவு எண், பிறந்த தேதியை கொண்டு இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுச்சீட்டில் உள்ள விதிமுறைகள் வருமாறு:-

* தேர்வு மையத்துக்கு எந்த காரணத்தை கொண்டும் செல்போன் கொண்டு வரக்கூடாது.

* ஆடை கட்டுப்பாட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

* தேர்வு விதிமுறைகளை மீறினால் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

* தேர்வுக்கு முன்னர் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சோதனை செய்யப்படும். 2-வது கட்டமாக காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடைபெறும் சோதனைக்குள் வரவேண்டும். கடைசி நேரத்தில் வருவதை தவிர்க்க வேண்டும்.

* முன்கூட்டியே தேர்வு நடைபெறும் இடத்தை தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் வர முடிகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நுழைவுச்சீட்டு, ஊதா அல்லது கருப்பு பால் பாயிண்ட் பேனா எடுத்து செல்வதை உறுதி செய்யுங்கள்.

* தேர்வு அறைக்கு சாவி, பணப்பை கொண்டு வரக்கூடாது.

* நுழைவுச்சீட்டில் மார்பளவு புகைப்படம் ஒட்டிக்கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive