பூண்டு பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

 தினமும் காலையில் பூண்டு பாலை குடித்து வந்தால், பல்வேறு உடல் பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.


காலையில் பூண்டு பாலை குடித்து வந்தால், சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம். முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவலாம் அல்லது அந்த பூண்டு பாலை குடித்தும் வரலாம்.
பாலில் பூண்டை வேகவைத்து பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வுத் தொல்லை மற்றும் கால்வலி போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டு பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பூண்டு பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை பூண்டு பால் குணமாக்குகிறது.
மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக பூண்டு பால் செயல்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
நுரையீரல் அழற்சி உள்ளவர்கள், பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், நுரையீரல் அழற்சி பிரச்சனை விரைவில் குணமாகும்.
செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடையச் செய்ய பூண்டு பால் உதவுகிறது. அதுவே வெறும் வயிற்றில் குடித்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

Share this

1 Response to "பூண்டு பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!"

  1. Very nice and very usefull message. Tq

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...