மாரடைப்பு முதலுதவி!

நம்மில் பலர் நெஞ்சு வலி குறித்து பெரிதும் அச்சம் கொள்வதுண்டு. ஒரு சிலர் வாயு பிடிப்பாள் ஏற்படும் வழியை கூட நெஞ்சு வலி என்று நினைத்து மருத்துவமனைக்கு அவசரமாக செல்வதுண்டு.


  அதே போல கடுமையான நெஞ்சு வலியையும் சிலர் அலட்சியம் செய்வதுண்டு. இரண்டுமே தவறு தான். சாதாரண வலிக்கும் நெஞ்சு வலிக்கும் உள்ள வித்யாசத்தை நம்மால் சற்று உணரமுடியும்.

மாரடைப்பு அறிகுறிகள் :

நெஞ்சு வலி ஏற்பட்டால் நெஞ்சின் நடுப்பகுதியில் கடுமையான வலி இருக்கும். நெஞ்சில் ஒரு மிகப்பெரிய பாரம் இருப்பது போல தோன்றும். அதோடு இடது கை, இடது தோள்பட்டை, கழுத்து, முதுகு, தொண்டை போன்றவைகளுக்கும் வலி பரவும். நெஞ்சு வலி ஏற்படும் சமயத்தில் உடல் வியர்க்க துவங்கும், கடுமையான சோர்வு ஏற்படும். சிலர் மயங்கிய நிலைக்கு செல்வர். குமட்டல் ஏற்படுவது போன்ற உணர்வும் இருக்கலாம்.

நெஞ்சு வலி / மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது :

இதய தசைகனாலது ரத்த குழாய்கள் மூலமாக செல்லும் ரத்தத்தில் இருந்து ஆக்ஸிஜனையும் தேவையான சத்துக்களையும் பெறுகிறது. இந்த ரத்த குழாய்களில் ஏதுனும் அடைப்பு ஏற்பட்டாலோ, அதிக அளவு கொழுப்பு படிந்திருந்தாலோ, ரத்தம் செல்வதில் தாமதம் ஏற்பட்டாலோ அதை தாண்டி உள்ள தசைகளுக்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதனால் அந்த தசைகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதனாலேயே பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

புகை பிடிப்பது, மன அழுத்தம், உடலிற்கு வேலை கொடுக்காமல் இருப்பது, சக்கரை நோய், அதிகப்படியான ரத்த அழுத்தம், அதிகப்படியான கொலஸ்ட்ரால், அதிகப்படியான கோவம் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.

நெஞ்சு வலி அல்லது மாரடைப்பு முதலுதவி :

நெஞ்சு வலி வந்த உடன் முதலில் இறுக்கமான ஆடைகளை தளர்த்தி நன்கு சுவாசிக்கும் வகையில் அமைதியாக படுக்க வைக்க வேண்டும்.

மாரடைப்பு பிரச்சனைக்காக அவர் ஏதேனும் மாத்திரை எடுத்துக்கொண்டிருந்தால் அது என்ன மாத்திரை என்பதை அறிந்து அதை அவர் உன்ன உதவ வேண்டும்.

மூச்சை நன்கு இழுத்து விட்டு முடிந்த வரை நன்கு இரும்பு வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நுரை ஈரலுக்கு ஆக்சிஸின் செல்லும். அதோடு இதயம் நிற்காமல் துடிக்கும்.

மூன்று நிமிடங்களுக்கு மேல் வலி நீடித்தால் எதையும் யோசிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம்.

Share this

0 Comment to "மாரடைப்பு முதலுதவி!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...