'மாணவிகளை பாலியல் பாதைக்கு அழைத்த கல்லுாரி பேராசிரியையின் 'வாட்ஸ்
ஆப்' ஆடியோவில் இடம் பெற்ற உயர் அதிகாரிகள் விவரத்தை வெளியிட வேண்டும்,'
என வலியுறுத்தி மதுரை காமராஜ் பல்கலையில் ஆசிரியர்,
அலுவலர், மாணவர் சார்பில் போராட்டம் நடந்தது.பேராசிரியை நிர்மலா தேவி,
மாணவிகளிடம் நடத்திய அலைபேசி உரையாடலில் கவர்னர் என்றும், பல்கலை உயர்
அதிகாரிகள் என்றும் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில் பேராசிரியை,
உயர் அதிகாரிகள் என யாரைக் குறிப்பிட்டார் என விவரம் வெளியிட வேண்டும்;
துணைவேந்தர் அமைத்த விசாரணை குழுவை ரத்து செய்ய வேண்டும். கவர்னர் நியமித்த
ஓய்வு பெற்ற சந்தானம் கமிஷனில், இரண்டு பெண்கள் உட்பட கல்வியாளர்
உள்ளிட்டோரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி
பல்கலை வளாகத்தில் போராட்டங்கள் நடந்தன.மதுரை காமராஜ் பல்கலை ஆசிரியர்,
அலுவலர் சங்க தலைவர் முத்தையா, செயலாளர் சதாசிவம், பொருளாளர்
பாலசுப்பிரமணியன், மூ.பா., தலைவர் புவனேஸ்வரன், பேராசிரியர்கள் தர்மராஜ்,
கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழக
கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் நிர்வாகி
பாரதி தலைமையில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம்
நடத்தினர். பல்கலை வளாகம் போராட்ட களமாக காட்சியளித்தது.
Public Exam 2026
Revision Test 2026
Home »
» மதுரை காமராஜ் பல்கலையில் ஆசிரியர், மாணவர் போராட்டம் : அதிகாரிகள் விபரம் வெளியிட வலியுறுத்தல்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...