தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை..!

காலாண்டு தேர்வுகள் அனைத்து வகுப்பினருக்கும் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதால் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக அரசு அறிவித்தது.
 தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் வருகின்ற 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  
ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு இன்று செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வருகிற 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதே போல,  9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளுக்கு செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கிய காலாண்டு தேர்வு வரும் 22-ஆம் தேதி வரை நடக்கிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 3 பகுதிகளாக தேர்வுகள் நடந்து வருகிறது. இத்தேர்வு முறையானது, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு என மூன்று பகுதியாக தேர்வு நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது, காலாண்டு தேர்வுகள் அனைத்து வகுப்பினருக்கும் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதால் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக அரசு அறிவித்தது.
மேலும், மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.  தொடர்ந்து 10 நாட்கள் காலாண்டு விடுமுறை என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Share this

4 Responses to "தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை..!"

 1. Special class vaitha enna panrathu

  ReplyDelete
 2. 10+2ஸ்பெஷல் கிளாஸ் உண்டா?

  ReplyDelete
 3. appudi meeri school vacha enna panuvinga

  ReplyDelete
 4. appudi meeri school vacha enna panuvingaa

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...