ஓடு.. குப்பைகளை எடு.. மீண்டும் ஓடு.. பெங்களூரில் பிரபலமாகும் பிளாக் ரன்னிங்.

பிளாக் ரன்னிங் என்ற ஓட்ட முறை பெங்களூரில்
தற்போது வைரலாகி உள்ளது.

இதில் பெங்களூரில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கலந்து கொள்கிறார்கள். தற்போது இதை பெரிய அளவில் மாரத்தான் ஓட்டம் போல நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்த ஓட்டம் நமது உடலுக்கு மட்டுமில்லாமல், சுற்றுப்புறத்திற்கும் நல்லதாகும். இந்தியா முழுக்க விரைவில் இந்த ஓட்டம் வைரலாக வாய்ப்புள்ளது.

பிளாக் ரன்னிங் என்றால் என்ன
பிளாக்கிங் என்பது, ஜாக்கிங் மற்றும் பிக்கிங் அப் வேஸ்ட் (jogging and picking up wastes) என்ற இரண்டு ஆங்கில வார்த்தைகள் சேர்த்து உருவாக்கப்பட்ட வார்த்தை ஆகும். அதவாது, ஜாக்கிங் செய்து கொண்டே, போகும் வழியில் உள்ள குப்பைகளை எல்லாம் எடுப்பது ஆகும். வெளிநாடுகளில் பிரபலமாக இருந்த இந்த ஓட்டம் இந்தியாவிலும் வைரலாகி உள்ளது.

என்ன செய்வார்கள்
இந்த ஓட்டத்தின் போது, பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல கூடாது. துணியால் ஆன பேக் மட்டும் முதுகில் மாட்டும் வகையில் கொடுக்கப்படும். பின் அதை, மாட்டிக்கொண்டு நாம் திட்டமிடப்பட்ட சாலையில் ஓட வேண்டும். செல்லும் வழியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை எல்லாம் பேக்கில் போட்டு எடுத்து செல்ல வேண்டும். கடைசியாக திட்டமிடப்பட்ட இடத்தில் எல்லா பைகளையும் வைத்துவிட்ட செல்ல வேண்டும். அந்த பைகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அப்புறப்படுத்திவிடுவார்கள்.
பெங்களூரில்
நடக்கிறது
இந்த அழகான முறை தற்போது பெங்களூருக்கு வந்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 2ம் தேதி இதற்கான பெரிய மாரத்தான் பெங்களுரில் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள இப்போதே 5000 பேர் பதிவு செய்துள்ளனர். இதற்கான இணைய பக்கத்தில் https://bengaluru.plog.run/ இப்போதும் பதிவுகள் தொடர்ந்து செய்யப்படுகிறது
சென்னையில் வருமா?

Share this