பஸ்களில் தொங்கும் மாணவர்களை கண்காணிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில், அரசு மற்றும்
உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில், மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிச்செல்வதால், விபத்து நடக்கிறது. இதை தவிர்க்க, பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை
அனைத்து வகை பள்ளி மாணவர்கள், பஸ்களில் பயணம் செய்யும் போது, படிக்கட்டுகளில் நிற்பது, ஆட்டோக்களில் கூடுதல் மாணவர்கள் ஏற்றுவதை தவிர்க்க, ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும்.
இறைவணக்க கூட்டத்தில் தெளிவுபடுத்துவதோடு, பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சாலை பாதுகாப்பு விதிகளை எடுத்துரைத்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Share this