சொந்த செலவில் பள்ளிக்கு TECHNOCLUB அமைத்த ஆசிரியர்! - DEO பாராட்டு

நாகப்பட்டினம் மாவட்டம்  கீழ்வேளூர் ஒன்றியம்
கோகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 05/09/2018 ஆசிரியர்தினவிழா நடைபெற்றது .அதில் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்கள் கலந்துகொண்டு TECHNOCLUB அறையை திறந்து வைத்து சிறப்பு செய்த்தார்கள்.கனவு ஆசிரியர் நா.சதீஷ் தான் பெற்ற பரிசுதொகை ரூ.10000/-- ஐ பள்ளிக்கு  EPSON PRINTER ஆக வழ்ங்கியுள்ளார் ,அதோடுமட்டுமல்லாமல் சொந்த செலவில் ரூ.9000/-- மதிப்புள்ள TROLLY SPEAKER ,ரூ.5000/-- மதிப்புள்ள கணினி ஆய்வக பொருட்கள் வழங்கியுள்ளார். இதை மாவட்ட கல்வி அலுவலர் திரு.ம.வேதரெத்தினம் அவர்கள் ஆசிரியருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.விழாவில் வட்டாரகல்வி அலுவலர்கள் ,வட்டாரவளமைய மேற்பார்வையாளர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

Share this