Hi Whatsapp Admins!

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Helo App -ல் உடனுக்குடன் Notifications பெற Click Here & Join Now! - https://m.helo-app.com/al/URyRSdZpF

திருக்குறள்


அதிகாரம்:விருந்தோம்பல்

திருக்குறள்:84

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

விளக்கம்:

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

பழமொழி

A liar is not believed when he speaks the truth

 பொய்யன் உண்மை பேசினால் கூட யாரும் நம்பமாட்டர்.

இரண்டொழுக்க பண்பாடு

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

 பொன்மொழி

நன்மை

பிறருக்கு நன்மை செய்வதில் ஒருவர் ஈடுபட்டாலே போதும். அவர்களின் இதயத்தில் நன்மை வளரும். நன்மை, அன்பு, கடவுள் ஆகிய எல்லாம் ஒன்றே.

        - ரமணர்

பொது அறிவு

1. ' போர் மற்றும் அமைதி' (WAR AND PEACE)  என்ற நூலை எழுதியவர் யார்?

  லியோ டால்ஸ்டாய்

2. இந்தியாவின்  தற்போதைய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் யார்?

 நிதின் கட்கரி

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

வெற்றிலை
1.  சளி மற்றும் தீராத வரட்டு இருமலை குணமாக்கும் வல்லமை பெற்றது.

2. தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் வாட்டிய இலையை போட விரைவில் குணமாகும்.

English words and meaning

Prudentece  கவனமுள்ள
Pungent.      காரமான சுவை
Perplex.  குழப்பு,பதறச்செய்
Pageant     வேடிக்கை
Pest.          தொற்றுநோய்

அறிவியல் விந்தைகள்

சப்பாத்திகள்ளி

 நான் ஒரு வறண்ட நிலத்தாவரம்.  நான்  வானம் பார்த்த பூமியில் அதிகம் காணப்படுவேன்.  மழைக்காலத்தில் சிறிய இலைகளுடன் செழிப்பாய் வளருவேன்.  ஆயினும் வறட்சிக் காலத்தில் இலைகள் உதிர்ந்து போனாலும் சோர்ந்து வாடி விடமாட்டேன்.  என் தண்டுப் பகுதியில் இயற்கை பச்சையத்தைக் கொடுத்து உணவு தயாரிக்கும் பணியை அதனிடமே கொடுத்துள்ளது.  நான் தண்டில் சேர்த்து வைத்துள்ள நீரை பருகும்படி எந்த விலங்குகளும் எனக்கு தீங்கு விளைவிக்காமலிருக்க, சிறிதும் பெரிதுமான முட்கள் உள்ளது.  ஆகவே வளமோ, வறட்சியோ எந்த சூழ்நிலையிலும் களிப்புடன் நான் வாழ்ந்து வருகிறேன்.

நீதிக்கதை

சம பங்கு :

ஒருநாள் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாட்டிய நாடகம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.

வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன்
மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன்.

ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொ          டுங்கள் " என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார்.

அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கனார்.

இன்றைய செய்திகள்

26.10.18

* எத்தியோப்பியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு -  முதல் பெண் அதிபராக சாஹ்லே ஹோக்  நியமிக்கப்பட்டார்.

* 2011 ம் ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு வரையில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்காகஅரசு சிறப்பு சலுகை வழங்கி உள்ளது. இதன்படி சிறப்பு ஆணை வெளியிட்பட்ட நாளில் இருந்து 3 மாத காலத்திற்குள் ஆன் லைன் மூலம் பதிவைபுதுப்பித்து கொள்ள வேண்டும்.

* ஏமன் நாட்டில் பெரிய அளவில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஐ.நா. மனித வளப்பிரிவு தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார்.

* பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடரை இந்தியாவின் ஸ்ரீகாந்த்,சாய்னா, சிந்து வெற்றியுடன் துவக்கியுள்ளனர்.

* இந்தியா, மலேசிய அணிகள் மோதிய ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் லீக் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

Today's Headlines

🌻Historical excellence in Ethiopia - Sahelle Hogg was appointed as First Lady Principal.

🌻Government has been offering special privileges for those who failed to renew their Employment Records from 2011 to 2016. Accordingly, the order should be recorded by online on 3 months from the date of special order.

🌻The United Nations Human Resource Chairman Mark Logock said that there is  lot of possibility in occurance of famine in Yemen.

🌻The opening ceremony of the French Open Badminton tournament started with victory by Srikanth, Saina and Sindhu.

🌻India and Malaysian teams have broken into the league match of the Asian Champions hockey series 'Draw'. Both teams advanced to semi-finals🤝

Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments