பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தை மாற்றப்போவதாக, அமைச்சர் செங்கோட்டையன்
அறிவித்துள்ளதால், ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம்
அடைந்துள்ளனர்.தமிழகத்தில், பள்ளி கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற
செங்கோட்டையன், ஓர் ஆண்டுக்கும் மேலாக, பள்ளி கல்வியின் நிர்வாக
முறையிலும், கல்வி முறையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
பொதுமக்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் விரும்பிய பல திட்டங்களை, அவர்
அமல்படுத்தியுள்ளார்.இருப்பினும், சில நடவடிக்கைகளில், அவர் அவ்வப்போது
பின்வாங்கி, திட்டங்களை மாற்றி மாற்றி அறிவிப்பதால், குழப்பம்
ஏற்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிவித்தார். அதற்கு
மாணவர்கள் தயாராகி, ஒரு தரப்பினர் பொது தேர்வும் எழுதி விட்ட நிலையில்,
அந்த தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது என,
அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கும் சேர்த்து,
ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த
நிலையும் மாற்றப்பட்டு, வழக்கம் போல், பிளஸ் 2வுக்கு மட்டும் சான்றிதழ்
வழங்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.'பிளஸ் 2, புதிய பாடத் திட்டத்தில், அதிக
பாடங்கள் இருப்பதால், அதை குறைத்து, வேறு பாடத்திட்டம் அமைக்கப்படும்' என,
அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.'புதிய பாடத்திட்டம்,
சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் வகையில் இருக்கும்' என, பேட்டிகளில் சவால் விட்ட
அமைச்சர், தற்போது இவ்வாறு அறிவித்துள்ளது, மாணவர்கள், ஆசிரியர்கள்,
பெற்றோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த அறிவிப்பால், தமிழக பாடத்
திட்டம் நிரந்தர தன்மையையும், உறுதியையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறைக்கப்படும் பாடத் திட்டத்தில் படித்தால், மாணவர்கள், மருத்துவ,
இன்ஜினியரிங் படிப்பில், சி.பி.எஸ்.இ., மாணவர்களை மிஞ்சி, மேல்நிலை கல்வியை
பெற முடியுமா என, பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» பிளஸ் 2 பாட திட்டத்தில் மாற்றம்? : மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பம்







Its not bad
ReplyDelete