++ அரசு பள்ளிகளில் படித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் மாநில செஸ் போட்டியில் சாதனை ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளில் மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது.

இதில் பல்வேறு பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வேலூர் கஸ்பாவை சேர்ந்த யோகா மாஸ்டர் ஆனந்தஜோதி என்பவரின் 3 பிள்ளைகள் சாதனை படைத்துள்ளனர். முதல் மகனான யோகானந்தன் கொசப்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 14 வயதுக்கு உட்பட்ட செஸ் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். 
அதேபோல் 2வது மகன் சந்திரகுமார் கஸ்பா அப்பாதுரை செட்டி தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 10 வயதுக்கு உட்பட்ட செஸ் போட்டியில் மாநில அளவில் 3ம் இடம் பெற்றுள்ளார். மேலும் அதே பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் இவரது மகள் ரூபிகா 6 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார். இவர்கள் 3  பேரும்  அரசு பள்ளியில் படித்து செஸ் போட்டியில் சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் ராமனை சந்தித்து கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து மாணவர்கள் வாழ்த்து பெற்றனர். அவர்களை கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது டிஆர்ஓ பார்த்திபன் உடனிருந்தார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...