ஆசிரியர்களுக்கு ஆதார் எண்ணுடன்,
'பயோமெட்ரிக்' வருகை பதிவை உடனடியாக அமல்படுத்த, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வியில், பாடத்திட்ட மாற்றம், நிர்வாக சீர்திருத்தம், தேர்வில் திருத்தங்கள் என, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 


இதன்படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டம், அமலுக்கு வருகிறது.இதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. சில பள்ளிகளில், பயோமெட்ரிக் முறையிலும்; சில பள்ளிகளில், கேமராவால் புகைப்படம் எடுத்தும், வருகை பதிவு செய்யும் முறை, சோதனை முறையில் அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில், ஆசிரியர்கள் வகுப்புக்கு வராமல், 'டிமிக்கி' கொடுப்பதை தடுக்கும் வகையில், பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவு திட்டம், அறிமுகம் செய்யப்படுகிறது.
 இந்த திட்டத்துக்கான ஆயத்த பணிகளை விரைந்து முடிக்கும்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து ஆசிரியர்களுக்கும், 'பயோமெட்ரிக்' வருகை பதிவுக்கான அலுவலக விபரங்களில், ஆதார் எண்ணை கட்டாயம் சேர்க்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. ஆதார் எண்ணில், பெயருக்கு பின், அவர்களின், 'இனிஷியல்' இருக்குமாறு, ஆதாரை திருத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுஉள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments