NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அறிவோம் உடல் நலம்- காலைத் தொங்க வைத்து அமரலாமா?



நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்.
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில்,
இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பலநோய்கள் உருவாகிறது.
இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை.

நாம் காலை மடக்கி #சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்குக் கீழே இரத்த ஒட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது.
எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தி அதிகமாக கிடைக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே தயவுசெய்து இனிமேல் காலைத் தொங்கவைத்து அமருவதை தவிருங்கள்.
குறிப்பாக சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும்பொழுது காலைத் தொங்கவைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.
எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி #சுக_ஆசானத்தில் அமர்ந்து சாப்பிட்டால், சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகி விடும்.
ஏனென்றால் இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

ஆனால், இப்பொழுது பல நபர்கள் காலை மடக்கி உட்காரமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் என்னவென்றால் நாம் ஒரேஒரு இடத்தில் மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்.

அது இந்திய வகை கழிவறை செல்லும்போது
யாருடைய வீட்டில் காலை மடக்கி அமருமாறு கழிவறை இருக்கிறதோ அவர்களுக்கு மூட்டு சம்மந்தப்பட்ட எந்த வலியும் வருவதில்லை.

ஆனால் யுரோப்பியன் கழிவறை உள்ள வீடுகளில் அனைவருக்கும் மூட்டு, முழங்காலில் வலியும் அது சம்பந்தப்பட்ட நோயும் வருகிறது. ஏனென்றால் இவர்கள் ஒருமுறை கூட வாழ்க்கையில் காலை மடக்கி அமர்வதே கிடையாது.

யுரோப்பியன் முறையில் அமர்ந்தால் குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,
முதலில் வயதானவர்களுக்கு மட்டுமே இந்த பிரச்சனை இருந்தது.
ஆனால் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே தயவுசெய்து யுரோப்பியன் வகை பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக இந்திய வகை பயன்படுத்துங்கள்.
இப்படிப் பயன்படுத்தும் பொழுது குறைந்த பட்சம் ஒரு நாளில் இரண்டு முறையாவது நாம் யோகாசனம் செய்வதைபோல் இருக்கும்.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்.
கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்.

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்.
சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து கொள்ளலாம்.
ஆனால் அந்த நாற்காலியில் காலை தொங்கவிடாமல் மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

நான் அப்படி தான் சாப்பிடுகிறேன்,
சுலபமான யோகாசனங்களை செய்யுங்கள்.
உடம்பில் சக்தியும் அதிகரிக்கும்.  உடம்பில் மூட்டுவலியும் கால்வலியும் வராது.
வாழ்வோம் ஆரோக்கியமாக!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive