இனி ஓடும் ரயிலில், ஷாப்பிங் செய்யலாம்! புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புதிய திட்டம் அறிமுகம்!

ஓடும் தொடர்வண்டியில், பயணியர் ஷாப்பிங் செய்யும் வசதி, வரும் புத்தாண்டில் இருந்து துவங்கப்பட உள்ளதாக தொடர்வண்டித்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகமானோர் பயணம் செய்வதற்கு தொடர்வண்டியையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக நீண்ட நேர பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் ரயிலை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், தொடர்வண்டி பயணத்தின் போது, தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல மறந்த பயணியரின் வசதிக்காக, ரயிலிலேயே ஷாப்பிங் செய்யும் திட்டத்தை, மேற்கு ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது .
 
இதற்காக மேற்கு ரயில்வே மண்டலத்தில், 16 அதிவிரைவு தொடர்வண்டிகளில், "ஷாப்பிங்" வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய திட்டத்திற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
முதல்கட்டமாக, வரும் ஜனவரி முதல் வாரத்தில், மும்பையில் இருந்து இயக்கப்படும் இரண்டு ரயில்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

Share this

0 Comment to "இனி ஓடும் ரயிலில், ஷாப்பிங் செய்யலாம்! புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புதிய திட்டம் அறிமுகம்!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...