'குரூப்
-- 1' தேர்வு முடிவுக்காக, 1.37 லட்சம் பேர், எதிர்பார்த்து
காத்திருக்கின்றனர்.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, குரூப் - 1
பதவிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
வழியாக போட்டி தேர்வு அறிவிக்கப் பட்டது.இதன்படி, துணை கலெக்டர் - 29;
டி.எஸ்.பி., - 34; வணிகவியல் உதவி கமிஷனர், தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி
பதவிகளுக்கு தலா - எட்டு. துணை பதிவாளர் - ஒன்று, மாவட்ட வேலைவாய்ப்பு
அதிகாரி - ஐந்து என, மொத்தம், 85 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
முதல் நிலை தகுதி தேர்வு, 2017 பிப்., 19ல் நடந்தது. இதில், 1.37 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, 2017 அக்., 13, 14, 15ம் தேதிகளில், பிரதான எழுத்து தேர்வு நடந்தது. முடிவுகள், 2018 ஜூனில் எதிர்பார்க்கப்பட்டன.ஆனால், 14 மாதங்களாகியும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கிடையில், இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவு கள் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...