கடினமோ கடினம் 10ம் வகுப்பு அறிவியல் வினாத்தாளை படித்து மயங்கி விழுந்த மாணவிகள்* தேர்வு எழுதிய பிறகு கண்ணீர் விட்டு அழுத பரிதாபம்
* ஆசிரியர்களை திணறடித்த கேள்விகள்

சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த அறிவியல் வினாத்தாளை படித்தும் பல மாணவிகள் பெஞ்ச்சிலேயே மயங்கி விழுந்தனர். அவர்களை தேற்றிய ஆசிரியர்கள் தெரிந்தவரை பதில் எழுதுமாறு அறிவுரை வழங்கினர். அதேசமயம் பல மாணவிகள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்து கூடி அழுத சம்பவம் பெற்றோர், ஆசிரியர்களை வேதனையில் ஆழ்த்தியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த எளிதாக இருக்கும், சர்வதேச தரத்தில் இருக்கும். மாணவர்களை தனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் தகுதியை வளர்க்கும் என்ற பில்டப்புடன் தொடங்கியது. ஆனால், அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மட்டுமில்லாது பல லட்சம் கொட்டி கொடுத்து ேதர்வு எழுதிய மெட்ரிக் பள்ளி மாணவர்களும் அழுது தீர்த்ததுதான் மிச்சம். காரணம் வினாத்தாள் செட் செய்தவர்கள் தங்கள் புலமையை காட்டும் வகையில் அதை அமைத்திருந்தார்களே தவிர மாணவர்களின் நலன், கல்வி தகுதி, அறிவுத்திறனை கொஞ்சமும் கண்டு கொள்ளவே இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

இது முதல் தேர்வு முதல் நேற்று நடந்த அறிவியல் தேர்வு வரை வெளியானது. இதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு 100 சதவீதம் இலக்கை வைத்து பாடம் நடத்திய பள்ளிகளே தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிைலயில் கடினமான கணக்கு தேர்வை எழுதிய மாணவ, மாணவிகள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத சுமார் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு முன்பாக ரிசல்ட் வந்தபோது தற்கொலை நடந்தது. தமிழக வரலாற்றில் தேர்வு கடினம் என்று முதல்முறையாக 10 பேர் தற்கொலை செய்து கொண்டது இதுவே முதல்முறை. இது தமிழகத்துக்கு பெருத்த அவமானம் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று நடந்த அறிவியல் பாடத் தேர்வில் இடம் பெற்ற, கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்துள்ளது. அந்த கேள்வித்தாளை பார்த்த மாணவ- மாணவியர் தேர்வு அறையிலேயே அழத் தொடங்கிவிட்டனர். சிலர் பெஞ்சிலேயே மயங்கி விழுந்தனர். அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் தேற்றியுள்ளனர்.

தேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவ மாணவியர் இது குறித்து கூறும் போது, 100க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள்கூட இந்த தேர்வில் சராசரி மதிப்பெண்தான் எடுக்க முடியும் என்று அழுதபடி கூறினர். சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் பெரும்பாலும் இந்த தேர்வில் தோல்வி அடையும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். அரசு பள்ளிகளை மூடும் வழி: இது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கூறும் போது, பத்தாம் வகுப்பு தேர்வு என்பது பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடியது. அப்படிப்பட்ட தேர்வில் புதுமையான முறையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை. இது முற்றிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஒழித்துக்கட்டும் ஏற்பாடு போலத் தெரிகிறது. அரசுப் பள்ளிகளை சீர்குலைக்கும் முயற்சியாக தெரிகிறது. அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் ஒழித்துவிட்டு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை புகுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளனர். புதிய முறையில் கேள்விகள் கேட்கப்படும் என்றும், பாடங்களில் உள்ளே இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்றும் தெரிவித்த தேர்வுத்துறை, சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்களை அழைத்து, கடந்த 10 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் இடம் பெற்ற கேள்வித் தாள்களை ஒப்பிட்டு, இனிமேல் இப்படித்தான் கேள்விகள் கேட்கப் போகிறோம் என்று பள்ளிக் கல்வித்துறையும், தேர்வுத்துறையும் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்களா. வெறும் சுற்றறிக்கை அனுப்பிவிட்டால் மட்டும் போதுமா. அது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது ஆசிரியர்களுக்கே தெரியவில்லை.

தவறான முடிவை தவிர்க்க வேண்டும்
கணக்கு, ஆங்கிலம், அறிவியல் என 3 தேர்வுகளில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டு மன உளைச்சல் அடைந்து, தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று  கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க அரசும், பள்ளிக் கல்வித்துறையும் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்தால், மாணவ மாணவியரின் தற்கொலையில் இருந்து காப்பாற்ற முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்
1 Comments:

  1. Very very worst question paper. So pity for tenth students.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive