தாவரங்களின்  இலையை   எடுத்து   கசக்கினால்  சாறுடன்   நுரை  வருவது  ஏன்?
தாவரங்களிலும்  சுவாசித்தல்  நிகழ்சி   நடைபெறுகிறது.   தாவரங்களிலுள்ள  இலையின்  கிழ்புறத்தில்  துளைகள் இருக்கிறது. இதற்கு  சுவாசத்துளைகள்  (  stomata or Little mouth)                          என்று  பெயர்.
 இத்துளைகள்   வழியாக    தாவரங்கள்    சுவாசிக்கின்றன. சுவாசத்துளைகள் வழியாக வெளிப்புறக்  காற்று  இலைக்குள்  செல்லும்.   இலைகளில்   ஷ்பான்ஜி  பரன்கைமா(Spongy Parenchyma cells)  செல்கள்  அதிக  செல் இடை வெளிவிட்டு  காணப்படும்.
 இந்த  செல் இடை வெளிக்குள்   சுவாசத்துளைகள் வழியாக வெளிப்புறக்  காற்று   வந்து  நிரப்பப்பட்டிருக்கும்.  நாம்  இலையை  எடுத்துக்  கசக்கும்  போது   செல் இடைவெளிக்குள் உள்ள  காற்று  இலைசாற்றுடன்  நுரைத்து வருகிறது.

Thanks to Mrs. S. Malathi, BT Asst, Thirunelveli

2 comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments