தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த மார்ச் 15ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. முதலில் ஏப்ரல் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பின் ஏப்ரல் 12-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.


இதில், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நான்கு ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம்.

இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெற முடிவும்.

அதேப் போல 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வினை எழுத வேண்டும். பட்டப் படிப்புடன், இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.


இத்தேர்வானது வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. முதல் தாள் தேர்வு ஜூன் 8ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஜூன் 9ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டு http://www.trb.tn.nic.in என்னும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் தங்களது பதிவு எண் மூலம் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments