Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெற்றோர், ஆசிரியர் கழகங்களை தொண்டு நிறுவனமாக மாற்றி நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்: அரசுப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வலியுறுத்தல்

பெற்றோர், ஆசிரியர் கழகங்களை தொண்டு நிறுவனமாக மாற்றி, நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பள்ளி தலைமை யாசிரியர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை யின்கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் பள்ளிக்கல்விக்கு மற்ற துறை களைவிட அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.28 ஆயிரத்து757 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி மாணவர் களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும்மடிக்கணினி, சைக்கிள்உட்பட 14 வகை இலவச பொருட்களுக்கு ஒதுக்கப்பட்டு விடுகிறது.எஞ்சியுள்ள நிதியைக் கொண்டுஅரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது கல்வித் துறைக்கு சவாலாக உள்ளது. இதை சமாளிக்க நன்கொடைகள் பெற்று அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வழிமுறையை தமிழக அரசு சமீபகாலமாக பின்பற்றிவருகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளின் நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு கிடைக்க அரசுகள் வழிவகுக்க வேண்டும் என கோரிக்கைகள்எழுந்துள்ளன.

இதுதொடர்பாக அரசுப் பள்ளிதலைமையாசிரியர்கள் கூறும்போது, “முன்னாள் மாணவர்கள்மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், நூலகம் போன்ற பள்ளிகளுக்கு தேவையான அடிப்படைவசதிகளை செய்து வருகிறோம்.அந்த வகையில் நாங்கள் உதவிகேட்டு அணுகும்போது பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருப்பது வரிவிலக்குதான். எதிர்பார்ப்புஅரசுப் பள்ளிக்கு வழங்கும் நன்கொடைக்கு அவர்கள் வரிவிலக்கு எதிர்பார்க்கின்றனர். இதைகருத்தில் கொண்டு நன்கொடை யாளர்களுக்கு வரி விலக்கு கிடைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

ஐடி ஊழியரான ராஜேஷ் என்பவர் கூறும்போது, ‘‘நான் பின்தங்கிய கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்தவன். இப்போது பிரபல தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன். அதற்கு நான் படித்த பள்ளி முக்கிய காரணமாக உள்ளது. அதனால் படித்த பள்ளிக்கு உதவ மனம் விரும்புகிறது. முறையாகசேருவதில்லைஅதேநேரம் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு வகையில் நாம் வரிகளை செலுத்துகிறோம். அதில் மத்திய அரசு கல்விக்கு குறைந்த நிதியே தருகிறது. தமிழகத்தில் அதிக நிதி ஒதுக்கினாலும் செலவினத்தில் வெளிப் படைத்தன்மை இல்லை. நமது வரிப்பணம் கல்வி வளர்ச்சிக்கு முறையாகசேருவதில்லை. எனி னும், படித்த பள்ளிக்கு உதவி கோரும்போது மனமுவந்து செய்யவே விரும்புகிறோம். அதற்கு வரிவிலக்கு கிடைத்தால் இன்னும் அதிகமாக உதவி செய்ய முடியும். என்னைப்போல பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள்’’ என்றார்.

இதுகுறித்து இடைநிலை ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது:

பிற நாடுகளில் கல்வித் துறைக்கு நம்மைவிட அதிகமாகவே நிதிஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் நிதிப் பற்றாக் குறையால் பல்லாயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளும், தேவைக்கு ஏற்ற நவீன உபகரணங்களும் எட்டாக் கனி யாகவே உள்ளன.

இதைத் தவிர்க்கவே அரசுப் பள்ளிகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் உதவிகளை பெற்று கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள அரசு உத்தர விட்டது. அரசு அழைப்பை ஏற்று கடந்த ஆண்டில் பல நிறுவனங் களின் உதவியால் 519 பள்ளிகளில் ரூ.58 கோடியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து இந்த ஆண்டும் நன்கொடை பெற்று பள்ளிகளின்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சித்து வருகிறோம்.

திட்டம் முழுமையடையும்

இதற்கிடையே அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் இப்போது நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் எல்லாரும் உதவ தயாராகவே உள்ளனர். அதற்கு வரிவிலக்கு கிடைத் தால் இன்னும் கூடுதலாக உதவிசெய்வார்கள். அரசு ஊழியர், ஆசிரியர்கள் என வரி செலுத்துபவர்கள் ஏழை குழந்தைகள் படிக்கும்அரசுப் பள்ளிக்கு அதிகமாகவே உதவ முன்வருவர். அவர்களுக்குகூடுதலாக வரி சலுகைகள் கிடைக்கும்பட்சத்தில் அரசு நினைக்கும் இந்த திட்டம் விரைவாகவே முழுமையடையும்.ஒருசில ஆண்டுகளிலேயே அனைத்துப் பள்ளிகளும் முழு வசதிகளை பெற்றுக்கொள்ளும்.

இதற்கு அரசுப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை தொண்டு நிறுவனங் களாக மாற்ற அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் குழுவில் அனைத்து நடவடிக்கைகளும் தீர்மானம் இயற்றியே செயல்படுத்தப்படுவதால்முறைகேடுகளும் நடைபெறாது.இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive