தேனி, கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ம் தேதி பள்ளி திறக்க உள்ள நிலையில்,
பள்ளி திறப்பு அன்று மாணவர்களை அன்புடன் வரவேற்க வேண்டும் என,
தலைமையாசிரியர் மற்றம் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி
உத்தரவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தொடக்க கல்விதுறையின் கீழ்
இயங்கும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 3 ல் திறக்க வேண்டும். அதற்கு முன்,
பள்ளி வளாகம் துாய்மையாகவும், பாதுகாப்பானதாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற
வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். வகுப்பறைகள் துாய்மையாக
இருப்பதுடன், தண்ணீர் வசதியுடன் பயன்படுத்தக் கூடியதாக கழிப்பறைகள் இருக்க
வேண்டும். அவற்றில் பழுது இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். தண்ணீர்
தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.
பழுதடைந்த மின்விசிறி, மின்விளக்குகள் பழுது நீக்க வேண்டும்.பள்ளி
திறக்கும் நாளில் மாணவர்கள் வரும் பொழுது அன்புடன் வரவேற்று நல்லதொரு
கற்றல் சூழலை ஏற்படுத்துவதுடன், பாடப்புத்தகங்கள், சீருடை, நோட்டு
புத்தகங்கள் அனைத்தும் அன்றே வழங்க வேண்டும். பஸ் பாஸ் பெற்று தர நடவடிக்கை
எடுப்பதுடன், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திறந்த வெளி கிணறு,
உயர் மின் அழுத்த கம்பிகள், மின் கசிவுகள், பழுதடைந்த கட்டடங்கள், புல்,
புதர்கள், குழிகள் இருந்தால் அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
உத்தரவிட்டுள்ளார்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» பள்ளி திறப்பு நாளில் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்களுக்கு உத்தரவு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...