Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.இ. கலந்தாய்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மே 31) கடைசி நாளாகும். வியாழக்கிழமை மாலை வரை 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 500-க்கும் அதிகமான இணைப்புப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் அரசு ஒதுக்கீட்டு பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் போன்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 2-ஆம் தேதி தொடங்கியது. இதற்கு மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். முதல் நாளிலேயே 15 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், வியாழக்கிழமை மாலை வரை 1 லட்சத்துக்கு 28 ஆயிரம் பேர் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.
விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அனைவருக்கும் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive