பின்லாந்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ரோபோட்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றன. "எலிசா" என்று அழைக்கப்படும் இந்த ரோபோட் பள்ளி மாணவர்களுக்கு மொழிப் பாடங்களை மிகத் துல்லியமாகக் கற்பிக்கிறது.

இந்த எலிசா ரோபோட்டினால் சுமார் 23 மொழிகளைப் புரிந்துகொள்ள முடியுமாம். அதேபோல் பேசவும் முடியும் என்று இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்சமயம் இந்த எலிசா ரோபோட், ஆங்கிலம், ஜெர்மனி மற்றும் பின்னிஷ் என்று வெறும் 3 மொழிகளில் மட்டுமே செயல்படும்படி வெளிவந்துள்ளது.

குழந்தைகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் எலிசா ரோபோட் பொறுப்பாகவும், அழகாகவும் பதில் அளிக்கிறது. குழந்தைகளின் உணர்வுகள் உணர்ந்து நடந்துகொள்ளும் படி இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக எலிசா ரோபோட்டிற்கு கேமரா மற்றும் பிரத்தியேக சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பது மட்டுமின்றி, அவர்களுக்குக் கதைகள் சொல்லுவது, நடனம் ஆடுவது, பாடுவது எனப் பல வித்தைகளை தன்னுள் வைத்துள்ளது. மருத்துவம், விவசாயம் எனப் பல துறைகளில் ரோபோட்களின் வருகை அதிகரித்துள்ளது. தற்பொழுது கல்வித் துறையிலும் ரோபோட்கள் கால் பதித்திருப்பது எதிர்காலத்திற்கான அடுத்தபடி முயற்சி என்றே கூறவேண்டும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments