கடந்த சில நாட்களாக வாட்ஸ்
அப்பில், 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியல் உலா வருகிறது.
2019-20 ஆம் கல்வியாண்டிற்கான வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் மற்றும் ஆண்டு செயல் திட்ட அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று வரை வெளியிட வில்லை.
வாட்ஸ் அப்பில் உலா வரும் வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியலில் கல்வித் துறையைச் சார்ந்த எந்த உயர் அலுவலரும் கையொப்பம் இட்டதாக தெரியவில்லை.
ஆகவே வாட்ஸ் அப்பில் உலா வரும் 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான, பள்ளி வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியல் நம்பகத் தன்மை இல்லாததாக உள்ளது.
ஒரு சில மாவட் டங்களில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 17.08.2019 அன்று வேலை நாள் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இது அந்தந்த  மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மற்ற மாவட்டங்களுக்கு பொருந்தாது.
எனவே பள்ளிக் கல்வித் துறை 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்ட பின், அதன் அடிப்படையில் சனிக் கிழமைகளில் பள்ளி செயல் படுவது நல்லது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 17.08.2019 அன்று பள்ளி வேலை நாள் என சுற்றறிக்கை அனுப்பியிருந்தால், இந்த உத்தரவின் அடிப்படையில், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமே நாளை முழு வேலை நாளாக செயல்பட வேண்டும்.
பிற மாவட்டப் பள்ளிகள் அவரவர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் எழுத்துப் பூர்வ அறிவிப்பின் படி செயல்படவும்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments