பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம்
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத் துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம், பிபீடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்) உள்ளிட்ட 17 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்த படிப்புகளுக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த பட்டப்படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிப்பது நேற்று காலை 10 மணிக்குதொடங்கியது.
மாணவ, மாணவியர் ஆன்லை னில் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். வரும் 19-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங் களுடன் செயலாளர், தேர்வுக் குழு,எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் வரும் 21-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிப்புகளுக்கு கடந்த ஆண்டு வரை மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...