NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஐடிஐகளில் சேர ஆக.20-க்குள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

தமிழக வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அளவில்தொழிற் பயிற்சி நிலையங்களின் (ஐடிஐ) தரத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தேசிய அளவில் நடத்தப்பட்ட தர நிர்ணயத் திட்டத் தில், சிறந்த தரம் உடையதாக 120 ஐடிஐகள் தேர்வு செய்யப் பட்டன. இதில் அதிகபட்சமாக, தமிழகத்தை சேர்ந்த 40 ஐடிஐகள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் முதல் 10 இடங்களில் 5 இடங்களை தமிழகத்தில் உள்ள அரசு ஐடிஐகள் பெற்றுள்ளன. இன்றைய காலகட்டம் மற்றும் தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப சில அரசு ஐடிஐகளில் நவீன தொழிற்பிரிவு கள் தொடங்கப்பட்டுள்ளன. இது தவிர, அரசு ஐடிஐகளில் படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களை தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பி, இலவச பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்குப் பிறகு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. இந்த ஆண்டில் அரசு ஐடிஐ களில் உள்ள இடங்கள், அரசு உதவி பெறும் ஐடிஐ மற்றும் தனியார் ஐடிஐகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 37,097 இடங்கள் உள்ளன. இதை நிரப்ப இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாவட்ட கலந்தாய்வு மூலம் முதல் கட்ட பயிற்சியாளர்கள் சேர்க்கை முடிந்துள்ளது.

இதன் முடிவில் அரசு ஐடிஐ களில் 7,840 இடங்களும், தனியார் ஐடிஐகளில் 5,888 இடங்களும் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப ஆகஸ்ட் 2-ம் தேதிமுதல் இணையதளம் (www.skilltraining.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப் பங்களை ஆகஸ்ட் 20-ம் தேதிக் குள் சமர்ப்பிக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங் களில் உள்ள காலியிடங்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்டஇனத்த வருக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படாவிட் டால், மாற்று இனத்தவரைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அரசு ஐடிஐகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive