அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பெண் சத்துணவு அமைப்பாளர்கள்,543 பேருக்கு, 'மகளிர் ஊர்நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் நிலை - 2' பதவி வழங்கப்பட்டுள்ளது.

சத்துணவு துறையில், 1991 டிச., 31 வரைபணியில் சேர்ந்த, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பெண் சத்துணவு அமைப்பாளர்கள், 543 பேருக்கு, பணியில்சேர்ந்த நாளை அடிப்படையாக வைத்து, பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டது.அவர்களுக்கு, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில், 'மகளிர் ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர் நிலை - 2' என்ற, பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, குறைந்தபட்சம், 18 ஆயிரத்து, 500 ரூபாய்; அதிகபட்சம், 58ஆயிரத்து, 600 ரூபாய் என்ற முறையில், சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்பட்டோர், பணி ஆணை கிடைத்த ஏழு நாட்களுக்குள், பணியில் சேர வேண்டும். இல்லையேல், அவர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்படும். மாறுதல் கோரிக்கைகள், ஓராண்டுக்கு பரிசீலிக்கப்படாது என, அரசு அறிவித்துள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments