மைசூரு: வருமான வரி செலுத்துவோரை நேரில் அழைத்து விளக்கம், தகவல் பெறாமல் கணினி மூலம் மதிப்பீடு செய்யும் முறையை வரும் விஜயதசமி நாளான அக்டோபர் 8ம் தேதி முதல் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மைசூருவில் வியாழனன்று ெதரிவித்தார். வருமான வரி மதிப்பீடு செய்யும்போது, தகவல்கள், விவரங்கள் பெற வேண்டும் என்றால் வரி செலுத்துவோரை நேரில் அழைக்காமல் தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டுபெறுவார்கள். இதன் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொள்வதாக எழும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. புதிய முறை அமலுக்கு வந்ததும், மைசூருவில் உள்ள வரி செலுத்தும் நபரிடம் அசாமின் குவஹாத்தி நகரில் உள்ள வருமான வரித்துறை அதிகாரி, கணினி மூலம் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டுப் பெற முடியும். இதன் மூலம் நேருக்கு நேர் உரையாடல் தவிர்க்கப்படும். அனைத்து தகவல்களும் கணினி மூலம் பதிவு செய்து கொள்ளப்படும். வரி மதிப்பூடு என்பது தனிப்பட்ட எந்த நோக்கமின்றி செய்யப்படும் என்று நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
* வருமான வரி மதிப்பீடு குறித்து தேவையான விளக்கங்கள், தகவல்களை வரி செலுத்துவோரிடம், வரித்துறை அதிகாரிகள் தற்போதுள்ள தொழில்நுட்ப வசதியைக் கொண்டு கேட்டு பெறுவார்கள்.
* வரி செலுத்துவோரிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் விசாரிக்கும்போது அத்துமீறி நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகல் எழுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் புதிய முயற்சியில் வருமான வரித்துறை 
இறங்கியுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments