இந்திய
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டு வரும் எம்.எஸ்சி.
படிப்புகளில் செர ஜாம் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் வரும்
கல்வி ஆண்டிற்கான ஜாம் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
எம்.எஸ்சி,
முனைவர் பட்ட ஆய்வுடன் இணைந்த எம்.எஸ்சி போன்ற படிப்புகளில் சேர ஜாம்
(JAM) எனப்படும் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த தேர்வு வருடந்தோறும்
நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி,
2020-ஆம் ஆண்டிற்கான தேர்விற்கு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2020ஆம்
ஆண்டு நடைபெறவுள்ள இத்தேர்வு ஐஐடி கான்பூர் நடத்துகிறது. இந்த முறை ஆறு
பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே இத்தேர்வு நடத்தப்படும்.
இதில், உயிரியல் அறிவியல் பாடப்பிரிவு மட்டும் நீக்கப்பட்டுள்ளது
உயிர்
தொழில்நுட்பம், கணித புள்ளிவிவரம், இயற்பியல் ஆகியவற்றுக்கு காலை 9.30 மணி
முதல் பகல் 12.30 மணி வரையிலும், வேதியியல், புவியியல், கணிதம் உள்ளிட்ட
பாடப்பிரிவுகளுக்குப் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வு
நடைபெறும்.
இத்தேர்வு
எழுத விருப்பமுள்ள மாணவர்கள்
http://jam.iitk.ac.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.
முக்கிய தேதிகள்:-
ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு ஆரம்பிக்கும் நாள் : செப்டம்பர் 5, 2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அக்டோபர் 8, 2019 (மாலை 5.30 மணி)
ஆன்லைனில் அட்மிட் கார்டு வெளியாகும் நாள் : ஜனவரி 7, 2020
ஜாம் 2020 தேர்வு நடைபெறும் நாள் : பிப்ரவரி 9, 2020
ஜாம் 2020 தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் : மார்ச் 9, 2020
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...